மும்பை:ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 3 ஒருநாள், 5 டி.20 போட்டியில் ஆட உள்ளது. இதில் டி.20 அணியில் இடம்பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்திக்கு, ஒருநாள் போட்டியில் இடம் கிடைக்கவில்லை. சாம்பியன் டிராபியில் 4 போட்டிகளில் ஆடி 10 விக்கெட் எடுத்த அவருக்கு ஆஸி.க்கு எதிரான தொடரில் இடம் கிடைக்காதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதுபற்றி வருண் சக்ரவர்த்தி கூறுகையில், ஒன்டே, டி.20, டெஸ்ட் என நான் எல்லா அணியிலும் இருப்பேன் என்று எதிர்பார்க்கிறேன்.
ஆனால் அது தேர்வாளர்களைப் பொறுத்தது. அதற்காக தன்னைத் தயார்படுத்தி வருகிறேன். ஆஸி.யில் சுழற் பந்து வீச்சாளர்களுக்கு ஒருவேளை குறைவான வாய்ப்பை வழங்கலாம். சாம்பியன்ஸ் டிராபியிலும் பார்த்தால், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு மாற்றாக நான் கொண்டு வரப்பட்டேன். எனவே அது நிலைமைகளைப் பொறுத்தது, என்றார்.