ஆடி நிறுவனம், மூன்றாம் தலைமுறை கியூ3 காரை சர்வதேச அளவில் கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்தது. இது, 147 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக் கூடிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 261 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 147 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் என 3 வித இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கும். 11.9 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 12.8 அங்குல மல்டி மீடியா இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன் உள்ளது. மேலும் 25.7 கிலோவாட் பேட்டரியுடன் கூடிய பிளக் இன் ஹைபிரிட்டுடன் வருகிறது. இந்த கார் அடுத்த ஆண்டு சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
+
Advertisement
