Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தாம்பரம் காவல் ஆணையரகத்தில் கழிவு செய்த காவல் வாகனங்கள் ஏலம்

தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 8 நான்கு சக்கர வாகனங்கள், தாம்பரம் மாநகர காவல், ஆயுதப்படை வளாகம், பதுவஞ்சேரியில், வரும் 27ம் தேதி காலை 10 மணியளவில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு 24ம் தேதி காலை 10 மணி முதல், மாலை 6 மணி வரை தாம்பரம் மாநகர காவல், ஆயுதப்படை வளாகம், பதுவஞ்சேரியில் நடைபெற உள்ளது.

இதில் கலந்துகொள்ள வருபவர்கள் தங்களின் அட்டையாள அட்டை, ஜிஎஸ்டி பதிவெண் சான்று மற்றும் முன்பணம் ரூ.1000 செலுத்தி பதிவு செய்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் முன்பணம் திரும்ப தரப்பட மாட்டாது. முன்பணம் செலுத்தி பதிவு செய்த ஏலதாரர்கள் 27ம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏலத்தொகையில் அன்றைய தினமே குறைந்தபட்சம் 25 சதவீத தொகையும் மற்றும் மீதமுள்ள ஏலத்தொகையான 75 சதவீத தொகை மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் மறுநாள் செலுத்திய பின் விற்பனை ஆணை வழங்கப்படும்.