கொல்கத்தா: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் 3 மாதங்களுக்கு பின் ரிஷப் பண்ட் களமிறங்க உள்ளார். தென் ஆப்ரிக்கா ஏ அணிக்கு எதிராக 2 சதங்களை விளாசியதால் ஆடும் லெவனில் துருவ் ஜூரல் இடம் பிடித்து உள்ளார்.
இதேபோல், தென் ஆப்ரிக்கா ஏ அணிக்கு எதிராக விளையாடு வருவதால், இந்த போட்டியில் ஆல் ரவுண்டர் நிதிஷ்குமார் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த மைதானத்தில் இதுவரை இந்தியா 42 டெஸ்டில் விளையாடி 13ல் வெற்றி, 9ல் தோல்வியடைந்து உள்ளது. 20 போட்டி டிராவில் முடிந்து உள்ளது. தென் ஆப்ரிக்கா இங்கு இந்தியாவுடன் 3 டெஸ்டில் ஆடி 1ல் வெற்றி, 2ல் தோல்வியடைந்து உள்ளது. இரு அணிகளும் இதுவரை 44 டெஸ்டில் மோதி உள்ளன. இதில் இந்தியா 16, தென் ஆப்ரிக்கா 18ல் வென்றுள்ளன. 10 போட்டி டிராவில் முடிந்தது. கடைசியாக மோதிய 5 டெஸ்டில் தென் ஆப்ரிக்கா 3-2 என முன்னிலை வகிக்கிறது.
