பாரிஸ்: 1972ம் ஆண்டு ஆண்கள் டென்னிஸிற்கான உலக நிர்வாக அமைப்பாக டென்னிஸ் நிபுணர்கள் சங்கம் (ஏடிபி) உருவாக்கப்பட்டது.உலகளாவிய போட்டிகளை முறையாக திட்டமிட்டு நடத்துவதில் ஏடிபியின் பங்கு மிக முக்கியமானது. ஏடிபி அமைப்பில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) இருந்த இத்தாலிய வீரர் மாசிமோ கால்வெல்லி ஜூன் மாதம் பதவி விலகினார்.
இதையடுத்து கென்யாவின் முன்னாள் டேவிஸ் கோப்பை வீரர் எனோ போலா (58) புதிய தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டு உடனடியாக பதவியேற்றார். 1990ம் ஆண்டில் 574 என்ற உயர் தரவரிசையை எட்டிய போலோ 2021 முதல் ஏடிபி இயக்குநர்கள் குழுவில் மூத்த வீரர் பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். கடந்த 2020 முதல் ஏடிபியின் சேர்மனாக இருக்கும் இத்தாலியைச் சேர்ந்த ஆண்ட்ரியா கௌடென்சியுடன் இணைந்து போலோ ஏடிபியை வழிநடத்துவார்.