பெங்களூரு: பெங்களூருவில் அசோக் பில்லர் அருகே ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்தவர்களிடம் இருந்து ரூ.7 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. பெங்களூரு சவுத் எண்ட் சர்க்கிள் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு பணம் நிரப்ப சென்ற வாகனம் 7 பேர் கொண்ட கும்பலால் கடத்திச் சென்றனர். வருமானவரித் துறையில் இருந்து வருவதாகக் கூறி பணம் இருந்த வாகனத்தில் இருந்தவர்களை இறக்கிவிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
+
Advertisement


