சென்்னை: பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த இளம்ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு நேற்று காலை நடந்தது. இதில் பயிற்சி நிறைவு செய்த 120 ஆண்கள், 34 பெண்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி பரமேஷ்வரர் திடலில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய விமானப்படை தளபதி அமர்பிரீத் சிங் கலந்துகொண்டு இளம் ராணுவ அதிகாரிகளின் கம்பீர அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
சிறப்பு அணிவகுப்பு நடத்தி ஏசிஏ.ராஜூவுக்கு சிறப்பு வீரவாள் மற்றும் வெள்ளிப் பதக்கம், பொருள் தக்கு வாளுக்கு தங்கப் பதக்கம், பிரிஞ்சல் தீட்சித்துக்கு வெண்கல பதக்கமும் வழங்கி கவுரவப்படுத்தினார். இதன்பின்னர் பயிற்சி முடித்த இளம் ராணுவ அதிகாரிகளின் சட்டையின் தோள்பட்டையில் மூடி வைக்கப்பட்டிருந்த நட்சத்திர சின்னத்தை அவர்களது பெற்றோர் திறந்துவிடும் நிகழ்ச்சியின்போது பெற்றோர் தங்களது பிள்ளைகளை கட்டியணைத்து ஆனந்த கண்ணீர்விட்டனர். பயிற்சி முடித்தவர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர்.