சண்டிகர்: அரியானா போலீஸ் ஏடிஜிபியாக இருந்த புரான் குமார் கடந்த 7ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதி வைத்தகடிதத்தில், மாநில டி.ஜி.பி உள்ளிட்ட 8 உயரதிகாரிகள் மீது கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார். ஏடிஜிபி புரான் குமார் தற்கொலை நடந்த ஒரு வாரத்தில் அவர் மீதான ஊழல் புகாரை விசாரித்த ரோதக் உதவி சப் இன்ஸ்பெக்டர் சந்தீப் குமார் லாதர் தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக புரான் குமாரை குற்றம் சாட்டி சந்தீப் குமார் லாதர் வீடியோ வெளியிட்டிருந்தார். சந்தீப் குமாரின் மனைவி அளித்த புகாரின் பேரில் புரான் குமாரின் பாதுகாப்பு அதிகாரி சுஷில், புரான் குமார் மனைவி அம்னீத் குமார் ஐஏஎஸ், ஆம் ஆத்மி எம்எல்ஏ அமித் ரத்தன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
+
Advertisement