புதுடெல்லி: கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பரில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டது. இந்த அமைப்பால் குவிக்கப்பட்டதாக கூறப்படும் வருமானம் ரூ.131கோடியாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில்,‘‘பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான ரூ.67கோடி மதிப்புள்ள புதிய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ம் தேதி சொத்துக்களை முடக்குவதற்கு தற்காலிக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கில் முடக்கப்பட்ட மொத்த சொத்துக்களின் மதிப்பானது தற்போது ரூ.129கோடியாகும்.
+
Advertisement

