சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தி வருகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டு பணிகள் குறித்து 15 துறைகளுடன் அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்துகிறார். காவல்துறை, சி.ஆர்.பி.எஃப்., ரயில்வே, விமான போக்குவரத்து, வருமானவரித் துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை. தேர்தல் நேரத்தில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
+
Advertisement


