திஸ்பூர்: அசாமின் நகோன் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 35 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் திறன் பதிவாகி உள்ளது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அசாமின் நாகோன் மாவட்டத்தில் இன்று, ஆகஸ்ட் 18, 2025 அன்று, மதியம் 12:09 மணிக்கு, 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் தேஸ்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
தேஸ்பூரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் 35 கிலோமீட்டர் ஆழத்தில், 26.28°N அட்சரேகை மற்றும் 92.71°E தீர்க்கரேகையுடன் மையப்பகுதி அமைந்திருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 7ம் தேதி அன்று 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் ஆகஸ்ட் 8ம் தேதி அன்று 2.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இந்த மாதம் அசாமில் ஏழாவது நிலநடுக்கமாகவும், நகோனில் மூன்றாவது நிலநடுக்கமாகவும் இது பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் அல்லது சொத்து சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.