யாங்கோன்: 20 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்கும் ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து தொடர், தாய்லாந்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதற்கான தகுதிச் சுற்றில் நேற்று, மியான்மர் அணியுடன் இந்திய மகளிர் அணி மோதியது. இதில் அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்திய இந்தியா, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியது. இதையடுத்து, 20 ஆண்டுக்கு பின், ஜூனியர் ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் ஆட இந்திய அணி தகுதி பெற்றது.
+
Advertisement