துபாய்: ஆசிய கோப்பை டி20 தொடரில் சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் நேற்று, இலங்கை அணி, 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்தது. ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இதையடுத்து, துபாயில் நேற்று நடந்த முதல் சூப்பர் 4 போட்டியில் வங்கதேசம், இலங்கை அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை அணியின் துவக்க வீரர்கள் பதும் நிசங்கா 22 ரன், குசால் மெண்டிஸ் 34 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.
10வது ஓவரில் கமில் மிஷாரா 5 ரன்னிலும், 14வது ஓவரில் குசால் பெரேரா 16 ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். 19வது ஓவரை வீசிய முஸ்தபிசுர் 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 20 ஓவர் முடிவில் இலங்கை, 7 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்தது. தாசுன் ஷனகா 64, துனித் வெல்லலகே 0 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். வங்கதேசம் தரப்பில், முஸ்தபிசுர் ரஹ்மான் 3, மெஹெதி ஹசன் 2 விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, 169 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் அணி களமிறங்கியது.