ஆசியா கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற இந்திய அணிக்கு கோப்பையை அளிக்காமல் எடுத்துச் சென்ற, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் நாட்டு உள்துறை அமைச்சருமான மோஷின் நக்விக்கு, ஷாகீத் ஸுல்பிகர் அலி புட்டோ எக்சலன்ஸ் தங்கப் பதக்கம் வழங்கப்பட உள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியையும் வகித்து வரும் நக்வி, ஆசிய கோப்பையை இந்திய அணிக்கு வழங்காமல் திரும்ப எடுத்து வரும் முடிவை தைரியமாக எடுத்ததை பாராட்டும் வகையில் இந்த பரிசு வழங்கப்பட உள்ளதாக, சிந்து மற்றும் கராச்சி கூடைப்பந்து சங்கங்களின் தலைவர் குலாம் அப்பாஸ் ஜமால் அறிவித்துள்ளார்.