ஆசிய கோப்பை ஆண்கள் டி20 இந்தியா-பாக். போட்டியை ரத்து செய்யக்கோரி மனு: விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
புதுடெல்லி: ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி தொடரில் குதியாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி வரும் 14ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இந்த போட்டியை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் உச்ச நீதிமன்றததில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், “சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே போட்டி நடத்தப்படுவது நம் நாட்டின் கண்ணியத்தையும், பொது உணர்வையும் சீர்குலைக்கிறது. எனவே இந்தியா பாகிஸ்தான் இடையே வரும் 14ம் தேதி நடைபெறவுள்ள போட்டியை ரத்து செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளனர். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேற்று மறுப்பு தெரிவித்தனர்.