ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 128 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான் அணி
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 128 ரன்களை வெற்றி இலக்காக பாகிஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறி 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.