துபாய்: துபாயில் நேற்று நடந்த ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் பி பிரிவில் வங்கதேசம், ஹாங்காக் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் அன்சுமான் 4 ரன்னிலும், ஹயாத் 14 ரன்னில் வெளியேற அடுத்து பொறுமையாக ஆடி வந்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜிசன் அலி 30 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் முர்டசா, நிஷாகாத்துடன் இணைந்து பொறுப்புடன் ஆட 15 ஓவரில் ஸ்கோர் 3 விக்கெட் இழப்பிற்கு 101 ஐ தொட்டது. ஸ்கோர் 117 ஆக உயர்ந்த நிலையில் முர்டசா 28 ரன்னில் ரன் அவுட் ஆனார். 19வது ஓவரில் அதிரடியாக ஆடிய நிஷாகாத் 42 ரன்னில் அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் ஹாங்காங் அணி 7 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. வங்கதேசம் தரப்பில் டஸ்கின் அகமது, ஹசன் சாகிப், ரிஷத் ஹூசைன் தலா 2 விக்ெகட் எடுத்தனர். வங்கதேச அணி 144 ரன் இலக்குடன் களமிறங்கியது.
+
Advertisement