புதுடெல்லி: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆடும் இந்திய அணி, ஆயுஷ் மாத்ரே தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சில், வரும் டிசம்பர் 12 முதல் 21ம் தேதி வரை, 19 வயதுக்கு உட்பட்டோர் மோதும், இளையோர் ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று வெளியிட்டது.
அதன்படி, இந்திய அணி கேப்டனாக, ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் இடம்பெற்றுள்ள ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டுள்ளார். தவிர அதிரடி இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியும் சேர்க்கப்பட்டுள்ளார். அடுத்தாண்டு, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கு முன்னோட்டமாக தற்போது நடைபெறும் ஆசியா கோப்பை போட்டிகள், சிறந்த பயிற்சிக்களமாக அமைய உள்ளன.
* ஆசிய கோப்பை யு-19 இந்திய அணி வீரர்கள்: ஆயுஷ் மாத்ரே (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்கோத்ரா (துணை கேப்டன்), வேதாந்த் திரிவேதி, அபிக்ஞான் குண்டு (விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங், யுவ்ராஜ் கோஹில், கனிஷ்க் சவுகான், கிலான் ஏ படேல், நமன் புஷ்பக், தீபேஷ், ஹெனில் படேல், கிஷான் குமார் சிங், உத்தவ் மோகன் ஆரோன் ஜார்ஜ்.

