Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆசிய கோப்பை வேண்டுமென்றால் ஏசிசி அலுவலகத்துக்கு வாருங்கள்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் அமைச்சர் கண்டிஷன்

துபாய்: ஆசிய கோப்பை வேண்டுமென்றால் ஏசிசி அலுவலகத்துக்கு வாருஙகள் என்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் அமைச்சர் கண்டிஷன் போட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆசிய கோப்பை டி20 தொடர் துபாயில் நடந்தது. இதில் லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வென்ற இந்திய அணி வீரரக்ள், பாக் வீரர்களுடன் கைக்குலுக்காமல் சென்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், போட்டிக்கு பின் பேட்டியளித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், ‘‘பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் நிற்கிறோம். எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். இந்த வெற்றியை, எல்லையில் வீரத்தை காட்டிய நமது ராணுவ படைகள் அனைவருக்கும் நாங்கள் சமர்ப்பிக்க விரும்புகிறோம்’’ என்றார்.

சூர்யகுமார் யாதவின் கருத்துகள் விளையாட்டில் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பதாக கருதி அவர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் புகார் அளித்திருந்தது. இதேபோல், போட்டியின்போது சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்கள் மீது இந்திய வாரியமும் புகார் அளித்திருந்தது. இதை விசாரித்த ஐசிசி, சூர்யகுமார் யாதவ் மற்றும் பாக். வீரர் ராவூப்புக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30% அபராதம் விதித்தது.

இந்த சூழலில், இறுதி போட்டியில் பாகிஸ்தானை வென்று இந்தியா கோப்பையை வென்றது. கோப்பையை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலர் தலைவராக உள்ள பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி, இந்திய அணிக்கு கொடுக்க முயன்றார். ஆனால், அவரிடம் இருந்து கோப்பையை பெற இந்திய அணி மறுத்துவிட்டது. இதனால், பாகிஸ்தான் அமைச்சர் ஆசிய கோப்பையை கையோடு எடுத்துசென்றுவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்து உள்ள பிசிசிஐ, இதுதொடர்பாக ஐசிசியிடம் புகார் அளிக்க இருப்பதாக கூறியது.

இந்நிலையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலர் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மோஷின் நக்வி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக கோப்பையை நான் வெற்றி பெற்ற அணியிடம் வழங்க அதே நாளில் தயாராக இருந்தேன். இப்போதும் கூட நான் தயாராக இருக்கிறேன். ஆனால், அவர்கள் தான் என்னிடம் கோப்பை வாங்க முன்வரவில்லை. கோப்பையை வாங்க வேண்டும் என்று நினைத்தார்கள் என்றால் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலர் அலுலகத்துக்கு வாருங்கள். வந்து என்னிடம் கோப்பையை பெற்றுவிட்டு செல்லுங்கள். நான் இன்னும் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்ல விரும்புகிறேன். நான் எந்த தவறையும் செய்யவில்லை. இதனால் நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க விரும்பவில்லை. பிசிசிஐயாக இருந்தாலும் சரி வேறு யாரிடமும் சரி மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை’ என தெரிவித்து உள்ளார்.

* மகளிர் உலகக்கோப்பை போட்டி கைகுலுக்க வேண்டாம் - பிசிசிஐ

13வது மகளிர் உலகக்கோப்பை போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. நாளை கொழும்புவில் நடக்கும் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியின் போது பாகிஸ்தான் வீராங்கனைகளுடன் கைகுலுக்க வேண்டாம் என இந்திய வீராங்கனைகளுக்கு பிசிசிஐ அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியாவிடம், ‘‘இந்திய பெண்கள் அணி ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் போது, ​​ஆண்கள் அணியின் அணுகுமுறையைப் பின்பற்றுமா’’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘‘என்னால் எதையும் கணிக்க முடியாது.அனைத்து கிரிக்கெட் நெறிமுறைகளும் பின்பற்றப்படும். கிரிக்கெட்டின் எம்.சி.சி விதிமுறைகளில் எது உள்ளதோ, அது செய்யப்படும் என்று மட்டுமே என்னால் உறுதியளிக்க முடியும். கைகுலுக்கல் மற்றும் கட்டிப்பிடித்தல் குறித்து இப்போதைக்கு எதையும் உறுதியாக சொல்ல முடியாது. பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவு கடந்த வாரத்தில் மாறவில்லை’’ என்று கூறினார்.