Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
South Rising
search-icon-img
Advertisement

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார் தொடர்: சூப்பர் ஓவரில் வென்று பாகிஸ்தான் சாம்பியன்

தோகா: ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார் தொடர் கத்தாரில் நடைபெற்று வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி போட்டியில் வங்கதேசம் ஏ - பாகிஸ்தான் ஷஹீன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 125 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக சாத் மசூத் 38 ரன் அடித்தார்.

பின்னர் களம் இறங்கிய வங்கதேசம் ஏ 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன் எடுக்க ஆட்டம் டையில் முடிந்தது. இதையடுத்து வெற்றியை தீ்ர்மானிக்க சூப்பர் ஓவர் கொண்டு வரப்பட்டது. இதில் வங்கதேசம் 2 விக்கெட் இழந்து 6 ரன் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் 4 பந்தில் 7 ரன் எடுத்து வெற்றிபெற்றது.