அபுதாபி: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று, இலங்கை அணிக்கு எதிராக முதலில் களமிறங்கிய வங்கதேச அணி, 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்தது. ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாய், அபுதாபி நகரங்களில் நடந்து வருகின்றன. பி பிரிவில் நேற்று நடந்த போட்டியில் இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதின. முதலில் ஆடிய வங்கதேச அணியின் துவக்க வீரர்கள் தன்ஸித் ஹசன், பர்வேஷ் ஹொசேன் எமான், ரன் எடுக்காமல் அடுத்தடுத்து வீழ்ந்து அதிர்ச்சி தந்தனர். பின் வந்தோரில் தவ்ஹித் ஹசன் 8, மஹேதி ஹசன் 9, கேப்டன் லிட்டன் தாஸ் 28 ரன் எடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
20 ஓவர் முடிவில் வங்கதேசம், 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. ஜேகர் அலி 41, ஷமிம் ஹொசேன் 42 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா 2, நுவான் துஷாரா, துஷ்மந்தா சமீரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, 140 வெற்றி இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.