Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆசிய கோப்பை ஹாக்கி இறுதியில் மல்லுக்கட்டும் இந்தியா-சீனா அணிகள்

ஹாங்சோ: ஆசிய கோப்பை பெண்கள் ஹாக்கிப் போட்டியில் சூப்பர் 4 கடைசி சுற்று போட்டிகள் நேற்று நடந்தன. இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் சீனா இறுதிக்கு தகுதி பெற்றது. இந்தியா தலா ஒரு வெற்றி, தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் இருந்தது. கடைசி சுற்று ஆட்டத்தில் வென்றால் அல்லது டிரா செய்தால் மட்டுமே பைனலுக்கு முன்னேற முடியும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில் ஜப்பானை நேற்று எதிர்கொண்ட இந்தியா, 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. அதனால் இறுதிக்கு முன்னேறிய இந்தியா, இன்றைய போட்டியில் சீனாவுடன் மோதவுள்ளது.