ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியை ரத்து செய்ய முடியாது - உச்சநீதிமன்றம்
டெல்லி : ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இதில் வரும் 14ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இரு அணிகளும் முதல் முறையாக மோதவுள்ளது. இந்த நிலையில், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டியை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சட்ட கல்லூரி மாணவர்கள் 4 பேர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுவில், "நாட்டு நலனை விட கிரிக்கெடை மேலானதாக நினைக்ககூடாது. தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாட்டுடன் கிரிக்கெட் விளையாடுவது எதிர்மறையான கருத்தை பிரதிபலிக்கும். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவது மக்களின் உணர்வுகளை புண்படுத்தும். எனவே இந்தியா - பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். அத்துடன் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும், "இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், "ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியை ரத்து செய்ய முடியாது. போட்டி திட்டமிட்டப்படி நடக்கும். அத்துடன் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது," எனவும் கூறியுள்ளனர்.