சென்னை: சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவனத்தில் படித்த மாணவர்கள் தங்கள் பழைய அரியர் பாடங்களை எழுத கடைசியாக ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ரீட்டா ஜான் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவனத்தில் கடந்த 1981-82 முதல் 2018 வரை இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர்ந்து அரியர் வைத்துள்ள மாணவர்கள் மீண்டும் தேர்வெழு பழைய அரியர் பாடங்களில் தேர்ச்சி பெற கடைசியாக ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதற்கான தேர்வு டிசம்பர் நடைபெறும். இத்தேர்வுக்கான விண்ணப்பம் வருகிற 10ம் தேதி (திங்கள்கிழமை) தொலைதூரக்கல்வி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.ideunom.ac.in) பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
+
Advertisement

