ஆறுமுகநேரி: ஆறுமுகநேரி கோயில் வளாகத்தில் பூசாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பெருமாள்புரத்தை சேர்ந்தவர் முருகேசன் (54). இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகள், 2 மகன்களும் உள்ளனர். முருகேசன் சுடலைமாடசுவாமி கோயிலில் பூசாரியாக இருந்து வந்தார். நேற்று மதியம் முருகேசன்வீட்டில் உணவு சாப்பிட்டு கோயில் வளாகத்தில் உறங்கியுள்ளார்.
அப்போது திடீரென கோயில் வளாகத்துக்கு வந்த மர்ம கும்பல் முருகேசனை சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே முருகேசன் ரத்த வெள்ளத்தில் இறந்தார். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் பூசாரி முருகேசன் கடந்த 2023ம் ஆண்டு சுடலை மாடசுவாமி கோயிலில் கொடை விழா நடத்தி உள்ளார். அப்போது முருகேசனுக்கும் பெருமாள்புரத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதனால் முன் விரோதம் இருந்து வந்தததாக கூறப்படுகிறது. பின்னர் கடந்த 2024ம் ஆண்டு கோயில் கொடை விழா போலீசார் பாதுகாப்புடன் நடத்துள்ளது. இந்த ஆண்டு இரு தரப்பினரிடையே பிரச்னை இருந்து வந்துள்ளதால் கடந்த 2 மாதங்களுக்கு முன் நடைபெற வேண்டிய கோயில் கொடை விழா நடக்கவில்லை. எனவே இந்த முன் விரோதம் காரணமாக அந்த தரப்பு கும்பல் முருகேசனை கொலை செய்திருக்கலாமா?. அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.