அருமனை: அருமனை அருகே நண்பர் பண மோசடி செய்ததால் விரக்தி அடைந்த கொத்தனார் மதுவில் ஆசிட் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அருமனை அருகே மாங்கோடு புலியூர்சாலை சரல்விளை பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன். அவரது மனைவி சரஸ்வதி (72). இந்த தம்பதிக்கு குமார் (43) என்ற மகன் இருந்தார். கொத்தனாரான குமார் திருமணம் செய்து கொள்ளவில்லை. அந்த பகுதியில் தனி வீட்டில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் குமார் தனியார் வங்கி ஒன்றில் வீட்டின் பத்திரத்தை வைத்து பணம் வாங்கி தனது நண்பருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த கடனை நண்பர் சரியாக கட்டவில்லை என்று தெரிகிறது. பணத்தை கட்டுமாறு குமார் கூறியும் நண்பர் அதனை கண்டு கொள்ளவில்லையாம். மாறாக பணத்தை கட்ட முடியாது என்று நண்பர் கூறிவிட்டாராம். நண்பர் பண மோசடி செய்ததை நினைத்து குமார் விரக்தி அடைந்து உள்ளார்.
இதனால் விபரீத முடிவை எடுத்த அவர் சம்பவத்தன்று வீட்டில் மதுவில் ஆசிட்டை கலந்து குடித்துள்ளார். பின்னர் வாந்தி எடுத்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய், சகோதரன் ஆகியோர் குமாரை மீட்டு நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குமார் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சரஸ்வதி அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* குமார் தனியார் வங்கி ஒன்றில் வீட்டின் பத்திரத்தை வைத்து பணம் வாங்கி தனது நண்பருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த கடனை நண்பர் சரியாக கட்டவில்லை என்று தெரிகிறது. பணத்தை கட்டுமாறு குமார் கூறியும் நண்பர் அதனை கண்டு கொள்ளவில்லையாம். மாறாக பணத்தை கட்ட முடியாது என்று நண்பர் கூறிவிட்டாராம். நண்பர் பண மோசடி செய்ததை நினைத்து குமார் விரக்தி அடைந்து உள்ளார்.