சென்னை: கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து சில தினங்களுக்கு முன்பு சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். இரங்கல் கடிதத்தை மு.க.முத்துவின் மனைவி சிவகாம சுந்தரிக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், ‘நடிகர், இசைக் கலைஞர் என பன்முக திறமை கொண்டவராக விளங்கிய மு.க.முத்து, சினிமா மற்றும் அரசியலில் ஆற்றிய பணிகளுக்காக எப்போதும் நினைவு கூரப்படுவார். அவரது மறைவுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டு உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய இந்த இரங்கல் கடிதத்தை தமிழக பாஜ செயலாளர் கராத்தே தியாகராஜன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
Advertisement