Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கலைஞர் பிறந்தநாள்: பிரேமலதா வாழ்த்து

சென்னை: இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்பதற்கு ஏற்ப வாழ்ந்தவர் கலைஞர் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தாநாளை யொட்டி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: இந்திய அரசியல் வரலாற்றின் மூத்த அரசியல் தலைவர் கலைஞரின் 102வது பிறந்தநாள் ஜூன் 3ம் தேதி. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்பதற்கு ஏற்ப அவர் வாழ்ந்த காலம் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் அவர் ஆற்றிய பணிகள் என்றும் அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.

கேப்டனுக்கும் அவருக்குமான அந்த அன்பும் நட்பும் மிக ஆழமானது. எங்களுடைய திருமணத்தை அவர் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். இவை அனைத்தும் வாழ்நாளில் மறக்க முடியாதவை. எனவே அவருடைய பிறந்த நாளுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.