சென்னை: போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. போதைப் பொருள் வழக்கில், கடந்த மாதம் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள், நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஸ்ரீகாந்த் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்தியன், வழக்கறிஞர் கே.பிரேம் ஆனந்த்தும், நடிகர் கிருஷ்ணா தரப்பில் வழக்கறிஞர் இன்பேன்ட் தினேஷும் ஆஜராகி வாதிட்டனர். அப்போது காந்த் தரப்பு வழக்கறிஞர், வீட்டில் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது காவல் துறையினர் கைது செய்ததாக தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி நிர்மல்குமார் அறிவித்தார்.
Advertisement


