விருதுநகர்: ஆபரேஷன் சிந்தூரில் பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் முத்துசாமிபுரத்தை சேர்ந்த சரண் கடந்த 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார் 11 மாத பெண்குழந்தைக்கு தகப்பனான சரண் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரில் பணியாற்றி உள்ளார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி காஷ்மீரில் பணியில் இருந்த பொது திடீர் என்று நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். இதை அடுத்து சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட ராணுவ வீரர் சரணின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.