டெல்லி: யார் உண்மையான இந்தியர், யார் இல்லை என்பதை தீர்மானிப்பது நீதித்துறையின் வேலை அல்ல என மக்களவை எம்.பி பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்திக்கு எதிராக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேற்று கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான பிரியங்கா காந்தி பேசுகையில், நீதித்துறையின் மீது முழு மரியாதையுடன் இதைச் சொல்கிறேன்.யார் உண்மையான இந்தியர், யார் இல்லை என்பதை தீர்மானிப்பது நீதித்துறையின் அல்லது எந்த நீதிபதியின் வேலையும் அல்ல.
ராகுல் காந்தி எப்போதும் ராணுவத்தையும் நமது வீரர்களையும் மதித்து வந்துள்ளார். அவருக்கு எப்போதும் ராணுவத்தின் மீது மரியாதை உண்டு.எதிர்க்கட்சித் தலைவராக, அரசாங்கத்திடம் கேள்விகள் கேட்பது அவரது பொறுப்பு, ஆனால் அரசாங்கம் பதிலளிக்க விரும்பாதபோது, அது இதுபோன்ற தந்திரோபாயங்களைக் கையாளுகிறது. நாடாளுமன்றத்தை நடத்தக்கூட முடியாத அளவுக்கு அரசாங்கம் பலவீனமாக உள்ளதா? முழு எதிர்க்கட்சியும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரும் போது, அரசு ஏன் SIR குறித்து விவாதம் நடத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.