சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒராண்டுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்க கோரி சதிஷ்குமார் மற்றும் சிவா ஆகியோர் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
சிவா சார்பில் வழக்கறிஞர் பி.சிவகுருநாதன், சதிஷ்குமார் சார்பில் என்.ஐயாக்கண்ணு ஆகியோர் ஆஜராகினர். மனுக்களை விசாரித்த நீதிபதி, 2 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் மற்றும் அதே தொகைக்கு இருநபர் உத்தரவாதத்தில் ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர்கள் மறு உத்தரவு வரும்வரை தினமும் காலை 10 மணிக்கு சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.