புதுடெல்லி: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் காவல்துறை விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என ஆம்ஸ்ட்ராங் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் தன்னையும் இடையீட்டு மனுதாரராக சேர்க்க வேண்டும் என்றுஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட்டு, உயிரிழ்ந்த நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
