டெல்லி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி அவரது வீட்டிற்கு அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி மகேந்திரன், பொண்ணை பாலு உள்ளிட்ட 27 பேரை கைது செய்தனர்.
2 பேர் வெளிநாட்டில் தலைமறைவாகி உள்ளதால் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கை போலீசார் சரியாக விசாரிக்கவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல் வாதிகளின் தொடர்பு உள்ளது. இதனால் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று ஆம்ஸ்ட்ராங் சகோதரர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த செப்டம்பர் 24ம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. சிபிஐக்கு மாற்றிய உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க கோரியும் . அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும் தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே மகேஸ்வரி அமர்வு விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என்று தெரிவித்த உச்சநீதிமன்றம் தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என்ற உத்தரவை பிறப்பித்தது.