டெல்லி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடரும் என்ற உத்தரவை திரும்பப் பெறக் கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரனைக்கு மாற்றி சென்னை ஐகோர்ட் அக்டோபரில் உத்தரவு பிறப்பித்தது. தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணை தொடரும் என கூறியது. 250 சாட்சிகளிம் விசாரணை நடத்தி 736 பக்க அறிக்கையை தமிழ்நாடு காவல்துறை தயாரித்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது. சிபிஐ விசாரணை என்பது காவல்துறை செயல்பாட்டை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
+
Advertisement


