சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான மறைந்த ரவுடி நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமனுக்கு அக்.28 வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. நாகேந்திரன் இறந்ததை அடுத்து அவருடைய மகன் அஸ்வத்தாமன் மற்றும் அஜித் ராஜாவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. இடைக்கால ஜாமின் முடிந்ததையடுத்து, நேற்று மாலை அஸ்வத்தாமன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தந்தை காரியம் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்; 15 நாட்கள் இடைக்கால ஜாமீன் தர வேண்டும் என அஸ்வத்தாமன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஒன்றரை வருடமாக ஜாமின் கிடைக்காமல் சிறையில் இருக்கும் சதீஷ் மற்றும் ஹரிஹரனுக்கும் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
+
Advertisement