Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரியானா பாஜவுக்கு புதிய தலைவர்

புதுடெல்லி: அரியானாவில் கடந்த 2014ம் ஆண்டு முதல் பாஜ ஆட்சி நடந்து வருகின்றது. எனினும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் காங்கிரஸ் 5 தொகுதிகளை கைப்பற்றியது. இதனைதொடர்ந்து சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜ தனது கட்சியை வலுப்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் எதிரொலியாக மாநில பாஜ தலைவராக எம்எல்ஏ மோகன்லால் பதோலி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மக்களவை தேர்தலில் சோனிபட் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.