Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

புராதன சின்ன ஆணையத்தை 4 வாரங்களில் அமைக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சின்னங்கள், கோயில், கட்டடங்களை பாதுகாக்க புராதன சின்ன ஆணையத்தை 4 வாரங்களில் அமைக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் நினைவு மண்டபம் போன்ற எந்த கட்டுமானங்களையும் கட்டக்கூடாது என அண்ணாமலையார் கோயில் கோபுரம் முன், வணிக வளாகம் கட்டும் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.