*நகர மன்ற தலைவர் ஆய்வு
அரக்கோணம் : அரக்கோணம் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் பொதுமக்களின் வசதிக்காக மண் சாலைகள் தார் சாலைகளாக மாற்ற அரசு சார்பில் ரூ.5.66 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அரக்கோணம் நகராட்சி முழுவதும் 54 மண் சாலைகள் தார் சாலைகளாக மாற்றும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், மாதவன் நகர், கணேஷ் நகர், ஹவுசிங் போர்டு பகுதிகளில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணியினை நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.ஆய்வின்போது, நகராட்சி பணி மேற்பார்வையாளர் பிரேம் சுந்தர், திமுக ஒன்றிய செயலாளர் பசுபதி உள்ளிட்டோர் இருந்தனர்.