கோபி: கோவை தனியார் கல்லூரி 2ம் ஆண்டு மாணவர்கள் சக்தி நிகேசன்(19), சிபிராஜ்(19), ரிஷிகுமார்(19), ஜெயஹரீஸ்(19), வினோத்குமார்(18) ஆகியோர் கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு ரிஷிகுமாரின் காரில் கோவையில் இருந்து பவானிசாகர் வழியாக கொடிவேரி அணைக்கு நேற்று வந்துள்ளனர். அங்கு குளித்துவிட்டு யூ டியூப்பில் தொட்டி பாலம் குறித்த வீடியோவை பார்த்து அரக்கன்கோட்டை வாய்க்காலுக்கு சென்று குளித்துள்ளனர். அப்போது சக்தி நிகேசனும், சிபிராஜூம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு பலியாகினர்.
+
Advertisement