அப்ரிலியா நிறுவனம் எஸ்ஆர் 175 என்ற கூட்டரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில், 174.7 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிபகட்சமாக 7,200 ஆர்பிஎம்-ல் 12.92 எச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்-ல் 14.14 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். வண்ண டிஎப்டி டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது.
எஸ்ஆர் 160க்கு மாற்றாக இது அறிமுகமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. தோற்றத்திலும் ஏறக்குறைய எஸ்ஆர் 160ஐ போன்று இருந்தாலும், பெயிண்ட், கிராபிக்ஸ் போன்றவை ஆர்எஸ் 457ஐ போல் காணப்படுகிறது. ஷோரூம் விலை சுமார் ரூ.1.26 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.