Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தெரிவு செய்யப்பட்ட 44 உதவி பொறியாளர்களுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அமைச்சர் பின்னர் தெரிவிக்கையில்; கடந்த நான்கு ஆண்டு திமு.க ஆட்சி காலத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக இதுவரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தெரிவு செய்யப்பட்ட 87 இளநிலை உதவியாளர்கள் , 108 பண வசூலாளர்கள், 7 சுருக்கெழுத்து தட்டச்சர்கள், 101 உதவிப் பொறியாளர்கள், 10 சமுதாய அலுவலர்கள், கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் 12 நபர்கள் ஆக மொத்தம் 325 நபர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி. சிங் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் ந.ப்ரியா ரவிச்சந்திரன் தலைமை பொறியாளர்கள் வி.எஸ்.கிருஷ்ணசாமி, சு.லால் பகதூர், உதவி செயலாளர் (நிர்வாகம் ) அ.கிருஷ்ணவேனி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.