பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒப்படைக்க கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கோரிக்கை
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: எஸ்ஐஆர் பணி மேற்கொள்ளும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிரியர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள் என்பதால் அவர்களது பணியை முடித்துவிட்டு இந்த பணியையும் மேற்கொள்வதில் சிரமங்கள் இருக்கிறது. இந்நிலையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று தேர்தல் பிரிவில் ஒப்படைப்பதற்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், சில மாவட்ட ஆட்சியர்கள் அவசர கதியில் இப்பணிகளை முடிக்குமாறு நிர்ப்பந்தப்படுத்துவதாக கூறுகிறார்கள். இப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் பணி நேரங்களையும் கடந்து கூடுதல் நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்களிலும் பணியாற்றுவதால் கூடுதலாக ஒரு மாத ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை நியாயமானது. தேவைப்பட்டால், தேர்தல் ஆணையம் மேலும் 15 நாட்கள் கூடுதல் அவகாசம் கொடுத்து இந்த பணியை நிறைவாக செய்வதற்கு நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.


