Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆப்பிக்

‘‘ஆப்பிக் - ஃபெஸ்டிவல்ஸ் & ஈவண்ட்ஸ்’’ (Appic - Festivals & Events)… விழாக்கள், நிகழ்வுகள், கச்சேரிகள் மற்றும் சமூகக் கூடுகைகள் பற்றிய தகவல்களை ஒரே இடத்தில் அறிந்து கொள்ள உதவும் செயலி. இச்செயலி இன்றைய இளம் தலைமுறைக்கும், நிகழ்ச்சிகளை விரும்பும் மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உலகம் முழுவதும் நடைபெறும் சிறிய, பெரிய நிகழ்வுகளின் விவரங்கள் இதில் எளிதாகக் கிடைக்கின்றன. இசை விழாக்கள், உணவுத் திருவிழாக்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் என பல்வேறு வகை நிகழ்வுகளைத் தேடி, அவற்றில் பங்கேற்க தேவையான தகவல்களைப் பெற முடியும்.

ஆப்பிக் செயலி பயனாளர்களின் விருப்பங்களையும், இருப்பிடத்தையும் கருத்தில் கொண்டு அதற்கேற்ப நிகழ்வுகளை பரிந்துரைக்கிறது. இதனால் தேவையற்ற தேடல்கள் இல்லாமல், உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை நேரடியாகக் கண்டுபிடிக்கலாம். நிகழ்வுகளுக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்வது, அங்கு செல்லும் வழியை அறிதல், நேர அட்டவணை மற்றும் முக்கிய அறிவிப்புகளை உடனுக்குடன் பெறுதல் ஆகிய வசதிகளும் இதில் உள்ளன. மேலும், Appic ஒரு சமூக வலைதளமாகவும் செயல்படுகிறது. ஒரே நிகழ்வில் பங்கேற்கும் மக்களுடன் இணைந்து உரையாடலாம், அனுபவங்களைப் பகிரலாம், புதிய நட்புகளை உருவாக்கலாம். குறிப்பாக ஏற்கனவே அந்த விழாவில் கலந்துகொண்ட மக்கள் நட்பால் சில ஆலோசனைகளும் பெறலாம்.