சென்னை: சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் பக்கவாதத்திற்கு அளிக்கும் அதிநவீன சிகிச்சையான ‘அப்போலோ அட்வான்ஸ்ட் ஸ்ட்ரோக் நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் சீனிவாசன் பரமசிவம், கண்ணன், விஜய சங்கர், முத்துகனி, அருள்செல்வன், சதீஷ் குமார், ஸ்ரீனிவாஸ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: பக்கவாத தாக்கத்தின்போது ஒவ்வொரு நிமிடமும் சுமார் 1,90,000 மூளை செல்கள் அழிக்கப்படுகின்றன.
இதனை கருத்தில் கொண்டு சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனைகள் பக்கவாதத்திற்கு அதிநவீன சிகிச்சைகளை அளிக்கும் தனது ‘அப்போலோ அட்வான்ஸ்ட் ஸ்ட்ரோக் நெட்வொர்க்’ (Apollo Advanced Stroke Network)-ஐ விரிவுபடுத்தி உள்ளது. இதன்நோக்கம், ஏராளமான மக்களை சென்றடைவது, ஆரம்ப காலத்திலேயே நோய் கண்டறியும் வாய்ப்புகளை வலுப்படுத்துவது, மற்றும் உயிரிழப்பு விகிதத்தை குறைத்து, குணமடையும் வாய்ப்புகளை மேம்படுத்த முடியும்.
இஸ்கிமிக் பக்கவாதத்திற்கு [ischemic stroke] மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி (Mechanical Thrombectomy) போன்ற நியூரோ என்டோவாஸ்குலர் சிகிச்சைகள் மற்றும் ஹெமோரேஜிக் பக்கவாதத்திற்கான [hemorrhagic stroke] என்டோவாஸ்குலர் மற்றும் மைக்ரோ சர்ஜிக்கல் சிகிச்சைகளை அளிப்பதில் கவனம் செலுத்துகிறோம், நேரத்தை தாமதப்படுத்தாமல், விரைவான, அறிவார்ந்த சிகிச்சைகளின் மூலம் அதிகமான உயிர்களைக் காப்பாற்ற வேண்டும், சிகிச்சை முடிவுகளை மேம்படுத்தவேண்டும் என்பதே இலக்கு.
திடீரென நரம்பியல் கோளாறு ஏதேனும் தோன்றினால், அதை பக்கவாதத்தின் எச்சரிக்கை அறிகுறியாக கருத வேண்டும். மேலும் செயற்கை நுண்ணறிவு (AI) தீவிர பக்கவாத சிகிச்சையை நாம் அணுகும் விதத்தை ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் மாற்றியமைத்து வருகிறது. செயற்கை நுண்ணறிவின் மூலம் இயங்கும் இமேஜிங் மற்றும் துல்லியமான முடிவெடுக்க உதவும் ஆதரவுக் கருவிகள் [decision-support tools] பக்கவாத பாதிப்பை விரைவாக அடையாளம் காணவும், முன்னெப்போதும் இல்லாத துல்லியத்துடன் சிகிச்சையை தொடங்கவும் நமக்கு உதவுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்
