Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

3 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்தியா வந்தன

புதுடெல்லி: அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் ஏஎச்-64 அப்பாச்சி ஹெலிகாப்டர், உலகின் மிகவும் மேம்பட்ட பல்துறை ஹெலிகாப்டர்களில் ஒன்றாகும். இந்திய ராணுவத்துக்கு ஆறு ஏஎச்-64 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்க கடந்த 2020ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

முதல் தவணையாக 3 ஏஎச்-64 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் நேற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. சரக்கு விமானம் மூலம் உ.பியின் ஹிண்டன் விமானப்படை தளத்தை வந்தடைந்த 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் விரைவில் ராணுவத்தில் இணைக்கப்பட உள்ளது.