டிவிஎஸ் நிறுவனம் அப்பாச்சி ஆடிஆர் பிடிஓ வேரியண்டின் விலையை அதிகரித்துள்ளது. அதாவது இந்த பைக்கின் துவக்க ஷோரூம் விலை ரூ.1.99 லட்சம். டாப் வேரியண்ட் சுமார் ரூ.2.14 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பிடிஓ எனப்படும் வாடிக்கையாளர் விருப்பத்தேர்வாக வடிவமைக்கப்படும் வேரியண்ட் விலை ரூ.5,000 அதிகரிக்கப்பட்டு ரூ.2.34 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த அட்வன்சர் பைக்கில் 299.1 சிசி ஆர்டி-எக்ஸ்டி4 லிக்வில் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 9,000 ஆர்பிஎம்-ல் 35.5 பிஎச்பி பவரையும், 7,000 ஆர்பிஎம்-ல் 28.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது.

