சென்னை: மதுரை ஆதினத்தின் கார் மீது மற்றொரு கார் மோதியது குறித்து ஆதீனம், சர்ச்சையான வகையில் பேசியது தொடர்பாக சென்னை சைபர் கிரைம் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் மதுரை ஆதீனத்திற்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கிய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், வயதை சுட்டிகாட்டி விசாரனை அதிகாரி நேரில் சென்று விசாரணை செய்து கொள்ள அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், மதுரை ஆதினம் காவல்துறை விசாரனைக்கு ஒத்துழைக்கவில்லை எனக்கூறி அவருக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார் ஆகஸ்ட் 8ம் தேதிக்குள் மதுரை ஆதீனம் பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டார்.
Advertisement