சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை:
தொழிலாளர்களுக்கு விரோதமாகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நான்கு தொகுப்பு சட்டங்களை ஒன்றிய மோடி அரசு நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இந்தச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படும்.
இதனை கண்டித்து விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி சார்பில் நாடு தழுவிய மாபெரும் கண்டன போராட்டம் நடத்த உள்ளது. அதன் தொடக்கமாக இன்று காலை 10 மணி அளவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ோராட்டத்தை துவக்கி வைத்து விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவரும், கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய தலைவருமான பொன்குமார் கண்டன உரையாற்றுகிறார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

