*ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
தர்மபுரி : தர்மபுரியில், போதைப் பொருட்களுக்கு எதிரான மாரத்தான் போட்டி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர்.தர்மபுரியில் தனியார் நிறுவனங்கள் சார்பில், போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. மாவட்ட விளையாட்டு அரங்கில், இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி தொடக்க விழாவிற்கு, விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் டிஎன்சி மணிவண்ணன் தலைமை வகித்தார்.
இப்போட்டிகளை டிஎஸ்பி சிவராமன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டிகள் ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி தனியாக நடைபெற்றது. 5 கி.மீ தூரம் நடைபெற்ற இந்த போட்டிகளில், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள், வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு. இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கும் குறிப்பிட்ட எல்லை வகுக்கப்பட்டு, போட்டி நடந்தது.
தொடக்க நிகழ்ச்சியில், தர்மபுரி மாவட்ட தடகள சங்க தலைவர் சரவணன், ரோட்டரி கவர்னர் சிவசுந்தரம், துணை கவர்னர் பிரதீப் குமார், மாரத்தான் ஒருங்கிணைப்பாளர் விக்ரமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது.
மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, தீபா சில்க்ஸ் உரிமையாளர் தியாகராஜன், எலைட் ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் மணிமாறன், செயலாளர் டாக்டர் ஜீவன், பொருளாளர் ராஜா கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ரொக்க பரிசு, கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.
இந்த மாரத்தான் போட்டியில் ஆண்கள் பிரிவில் லோகேஷ் முதலிடம், சந்தோஷ்குமார் 2ம் இடம், பூவரசன் 3ம் இடம் பிடித்தனர். பெண்கள் பிரிவில் கௌரி முதலிடம், இளவரசி 2ம் இடம், கொடிலா 3ம் இடம் பிடித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவுக்கும் 25 பேருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மாரத்தான் போட்டியை முன்னிட்டு தர்மபுரி நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.